Advertiment

கட்டில் படத்துக்கு சர்வதேச விருது !

by Editor

சினிமா
கட்டில் படத்துக்கு சர்வதேச விருது !

பெங்களூருவில் நடைபெற்ற இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டன.


இந்த விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படமாக ‘கட்டில்’ திரைப்படம் விருதினைப் பெற்றது. அந்தப் படத்தின் இயக்குநரான இ.வி.கணேஷ்பாபு இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘கட்டில்’ திரைப்படம் முதன்முறையாக ஒரு சர்வதேச விருதினைப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு படத் தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். “விரைவில் தியேட்டர்களில் ‘கட்டில்’ வெளியாகும்” என்று இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

Share via

More Stories