Advertiment

இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை: போஸ்டர்

by Admin

சினி ஆல்பம்
இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை: போஸ்டர்

இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

அசுரன் படத்துக்குப் பிறகு சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இதில் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்னார் இளையராஜா. ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றார்கள்.

இந்நிலையில் சூரி கதாநாயகனாக நடிக்கும் வெற்றி மாறன் படத்துக்கு விடுதலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

Share via

More Stories