Advertiment

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்து மட்டுமே உண்ண வேண்டும்-. மா .சுப்பிரமணியம்

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்து மட்டுமே உண்ண வேண்டும்-. மா .சுப்பிரமணியம்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகின்ற சூழலில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியம் இது குறித்து, கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்து மட்டுமே உண்ண வேண்டும். இறந்து போன இறைச்சிகளை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் . அத்தகைய கோழிகளை ஊருக்கு வெளியே ஆழமாக புதைக்க வேண்டும் என்றும் அரைவேக்காட்டு  ஆம்லெட் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னையில் சுமார் 1500 காகங்கள் உயிரிழந்த நிலையில் அவற்றின் மாதிரிகளை சோதித்ததில் h5n1 எனப்படும் பறவை காய்ச்சல் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். காய்ச்சல், தலைவலி அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைஅணுக வேண்டுமென்றும் பொதுமக்கள் தேவையற்ற மீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share via

More Stories