Advertiment

இயக்குனர் பாரதி ராஜாபூரணமாக குணம் பெற்று வருகிறாா்.இயக்குனர் ஆா்.கே.செல்வமணி

by Admin

சினிமா
இயக்குனர் பாரதி ராஜாபூரணமாக குணம் பெற்று வருகிறாா்.இயக்குனர் ஆா்.கே.செல்வமணி

பிரபல இயக்குனர் பாரதிராஜா உடல் நலத் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் , அவரைப் பற்றிய தவறான தகவல்களை பலர் பரப்பி வருவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தினர் அவரை நேரில் சந்திக்கும் பொருட்டு மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் பாரதிராஜாவை நேரில் சந்திக்க மருத்துவமனை அனுமதிக்கவில்லை. காரணம் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதனால் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர் தரப்பு சொன்னதால் அவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில் அவர் பூரணமாக குணம் பெற்று வருவதாகவும் தயவு செய்து இயக்குனர் இமயத்தை பற்றிய தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தாா் இயக்குனர் செல்வமணி . அவருடன் தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இயக்குனர்கள் அமீர், லிங்குசாமி ,பாண்டியராஜ், நடிகரும் திரைப்பட மக்கள் தொடர்பான சித்ரா லட்சுமணன்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,சீனு ராமசாமி, கே. ஆர் .முருகதாஸ் உள்ளிட்ட சென்றிருந்தனர்.

 

Share via

More Stories