நடிகர் விஜய் தேவார கொண்டா மற்றும் ராஸ்மிகா மந்தனா இடையேயான காதல் விவகாரம் இப்பொழுது திருமண நிச்சயதார் த்தில் முடிந்தது. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அதாவது 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் 2019 ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்த பொழுது இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளிவந்தன ஆனால் இருவரும் அது வதந்தி என்று புறந்தள்ளி சென்ற நிலையில் இப்பொழுது இருவருக்கும் ஹைதராபாத்தில் அதிகாரப்பூர்வமான திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.