Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும்.
 
மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே.

இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உண வுகள்எளிதில் சீரணம்ஆகாது. 

இவர்கள் மலமிளக்கி மருந்து களைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்புவலி, தலை வலி என பல உபாதைகள் உருவாகும். 

இப்பிரச்சனைக் கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. 

தினமும் படு க்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மேலும் கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சமஅளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.

மலச்சிக்கலுக்கு..

பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்..

அகத்திக் கீரையை வாரம் 1 நாள் சமைத்து உன்ன மலச்சிக்கல் தீரும்...

காலை எழுந்தவுடன் 1.260 மி சுத்தமான குடிநீர் அருந்தி வர மலச்சிக்கல், வயிட்ற்று உபாதைகள், தலைவலி, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்...

எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு பிழிந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

வல்லாரையை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

இளநீரில்  சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.

துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி, அகத்திக் கீரை ஆகியவைகளின் இலைகளை பறித்து நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் இரு வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்...

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

Share via