
கொரானா தொற்றின் மூன்றாம் அலையை எதிக்கொள்ள வருமுன் காப்பது சிறந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக மக்களையும் இளைஞர்களை உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் காலையில் உடற்பயிற்சி செய்யும் விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது
உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் பேணிக்காப்பது நோக்கமாக, தமிழக முதல்வர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஈ.சி.ஆர் சென்று சைக்கிளிங், நடைபயிற்சி உள்ளிட்டவை மேற்கொண்டு ஏற்கனவே தமிழக மக்களுக்கும் இளைஞர்களையும் கவர்ந்துள்ள நிலையில் இன்றைய தினம் வீட்டிலேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்து வரக்கூடிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த ஒரு மணி நேரமாக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
உடல் நலத்தை பேணி காப்பது ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்கியங்களை தமிழகமக்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக உடற்பயிற்சி செய்யக் கூடிய இந்த வீடியோ, இன்றைய தினம் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோவாகவும் அமைந்துள்ளது.