Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசி பலன் அளிக்குமா?- ஆய்வு முடிவு

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசி பலன் அளிக்குமா?- ஆய்வு முடிவு

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், எத்தனை பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என்பது தெரியவில்லை.

வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.

 மே மாதம் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேரிடம் இருந்து பெறப்பட்ட 8 லட்சத்து 11 ஆயிரத்து 624 சோதனை முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

* ஆல்பா வைரசுடன் ஒப்பிடுகையில் டெல்டா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா (இந்தியாவில் இதுதான் கோவிஷீல்டு) தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன. ஆனால் புதிய தொற்றுகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை கொண்டுள்ளன.

* கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.

* டெல்டா வைரசைப் பொறுத்தமட்டில், 2 தடுப்பூசி போட்ட பின்னரும், தடுப்பூசி போடப்படாதவர்களைப் போலவே வைரஸ் உச்ச நிலையை கொண்டுள்ளது. ஆனால் ஆல்பா வைரசை பொறுத்தவரையில், தடுப்பூசிக்கு பிந்தைய நோய்த்தொற்று உள்ளவர்களின் வைரஸ் உச்ச நிலை குறைவாக உள்ளது.

* தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், எத்தனை பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என்பது தெரியவில்லை.

பைசர் தடுப்பூசி

* பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் 2 டோஸ்கள், புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக ஆரம்பத்தில் நல்ல செயல்திறனை கொண்டுள்ளன. ஆனால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுகிறது.

* தடுப்பூசிகள் கொரோனா வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன. ஆனால் கொரோனா வருவதற்கான வாய்ப்பை தவிர்ப்பதில்லை.

இவ்வாறு அதில் தெரியவந்துள்ளது.
 

Share via