Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தெரியுமா உங்களுக்கு...

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
தெரியுமா உங்களுக்கு...

1. 
காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு கெடுகிறது....

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் கெடுகிறது....

3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும் போது, விழிக்காதிருக்கும் போது பித்தப்பை கெடுகிறது....

4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் கெடுகிறது....

5. நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் கெடுகிறது....

6. சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும் போது நுரையீரல்கள் கெடுகின்றன....

7. அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் கெடுகிறது....

8. அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் கெடுகிறது...

9. சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும் போது கணையம் கெடுகிறது....

10. இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும் போது கண்கள் கெடுகின்றன....

Share via