Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

‘வாட்டர் ஹீட்டரை’  OFF செய்து விட்டு குளிக்க மின் வாரியம் வேண்டுகோள்.

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
‘வாட்டர் ஹீட்டரை’  OFF செய்து விட்டு குளிக்க மின் வாரியம் வேண்டுகோள்.

வீடுகளில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் பொதுமக்கள், தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்குமாறு மின்வாரியம் வேண் டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பு: 

தற்போது பனிக்காலமாக இருப்பதால் தண்ணீர் சூடேற் றும் வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை பாதுகாப்பாகவும், கவன மாகவும் பொதுமக்கள் கையாள வேண்டும். 

வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை இயக்கத்தில் வைத்துக்கொண்டு குளிக்க வேண் டாம். 

மேலும் நீர் வெப்பநிலையை அடைந்தவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானது. 

வாட்டர் ஹீட்டரை அணைக்காமலேயே குளிக்கும்போது பல நேரங்களில் மின் விபத்து ஏற்படுகிறது.

மேலும் அனைவருடைய இல்லங்களிலும் உயிர் பாதுகாப்பு சாதனத்தை (RCCD) அமைத்து தங்கள் குடும்ப உறவுகளை பாது காக்க கேட்டுக்கொள்கிறோம்.

Share via