Advertiment

நயன்தாரா திருமண ஆல்பம் வெளியாகி விட்டது. தனுஷ் இட்லி கடை படப்பிடிப்பில்...

by Admin

சினிமா
நயன்தாரா  திருமண ஆல்பம் வெளியாகி விட்டது.  தனுஷ் இட்லி கடை படப்பிடிப்பில்...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வின் திருமண ஆல்பம் வெளியாகி விட்டது. அதற்கு முன்பு நடிகர் தனுஷை பற்றி நயன்தாரா வெளியிட்ட மூன்று பக்க கடிதம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு தனுஷ் தரப்பில் எந்த விதமான மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. நடிகர் தனுஷ் தற்பொழுது தேனி சுற்று பகுதிகளில் இட்லி கடை படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதின் காரணமாக, சென்னைக்கு வந்த பிறகு அவர் இது குறித்து பதில் அளிப்பார் என்கிற கருத்து நிலவி வருகிறது. இதற்கிடையே நயன்தாராவின் திருமண ஆல்பம் மிக எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் சாதாரணமானதாக இருப்பதாகவும் தகவல். இதற்கு ஏன்.. இவ்வளவு முரண்பாடான சூழல்களை இருவரும் உருவாக்கி விட்டார்கள் .பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் பேசி சரி பண்ணி இருக்கலாம். ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு மோதல் இருப்பதின் காரணமாக பகை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கோடம்பாக்க திரை உலகத்தினர்  சொல்லி வருகிறார்கள்.

Share via