ராஜஸ்தான் சவாய் மேன் சிங் கிரிக்கெட் மைதானத்தில்நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீட்டைத் தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த பெங்களூர் அணி 20 ஓவரின் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்தது. கோலி 72 பந்துகளில் 113 ரன்களை எடுத்து தன்னுடைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மேலும் ஒரு மைல் கல்லை நாட்டினார். .அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல்அணி 4 விக்கெட் இழப்பிற்கு 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் செஞ்சுரியின் மூலம் 4000 ரன்கள் கடந்து சாதனை செய்தார்.