Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அரசு, தனியார் ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலம்  ஆக.4 வரை விண்ணப்பிக்கலாம்

by Editor

கல்வி
அரசு, தனியார் ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலம்  ஆக.4 வரை விண்ணப்பிக்கலாம்

 


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 04.08.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்து தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையம் துணை இயக்குநர்/முதல்வர் எஸ்.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேரஇணையதளம் மூலமாகவிண்ணப்பிப்பதற்கு04.08.2021 வரைவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8-ஆம் வகுப்புமற்றும் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் அரசுஒதுக்கீட்டின்படி,ஐ.டி.ஐ-களில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சிநிலையவிவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்பகட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்திலுள்ளவிளக்கக் கையேட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் ஆதார் கார்டு புகைப்படம் மற்றும் சிறப்புநிலை முன்னுரிமைச் சான்றிதழ்கள் இருப்பின் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.


எனவேஐ.டி.ஐ பயிற்சியில் சேரவிரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திலுள்ள மாதிரி விண்ணப்பத்தினைபார்த்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாகரூ.50/- பற்றுஅட்டை(Debit card) / கடன் அட்டை(Credit card) / இணைய வழி வங்கிக் கணக்கு ​மற்றும் யுபிஐ(UPI) யைதேர்ந்தெடுத்து Google Pay/Paytm வாயிலாகசெலுத்தலாம்.


மேலும் அரசுதொழிற் பயிற்சிநிலையங்கள் மற்றும் அரசு இ-சேவைமையங்கள் பார்வையிட்டு இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்திசெய்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்ககேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின்படி தரவரிசைப்பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில் அரசுவிதிகளுக்கு உட்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்.


மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியானஅலைபேசிஎண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் குறுந்தகவல்களாக மட்டுமே அனுபப்பப்படும் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்தகேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித்தொகைரூ.750/- (வருகைநாட்களுக்குஏற்ப), கட்டணமில்லா பேருந்துசலுகை, விலையில்லாமிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லாசீருடை – ஒருசெட், விலையில்லா காலணி – ஒருசெட், பயிற்சிக்குதேவையானநுகர்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share via

More Stories