Advertiment

100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

by Admin

விளையாட்டு
100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ,இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் மோதின .டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது .ஐம்பது ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுக்க ...230 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில் களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி34.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்னில் சுருண்டது. இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனக்குறைவாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தவிடு பொடியாக்கும் முகமாக இந்திய அணியினருடைய ஃபீல்டிங் இருந்ததால் வெகுசுலபமாக  இங்கிலாந்து அணியை பந்தாட முடிந்தது. மீண்டும் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது தரவரிசை பட்டியலில்

.இந்திய அணி வெற்றிக்கு ரன்களை எடுப்பதில் ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றியது போன்று இங்கிலாந்து அணியை வீழ்த்துவதில் தொடக்கப் புள்ளியாக 2 விக்கெட் களை எடுத்த பும்ரா வை தொடர்ந்து ஷமியும் குல்தீர் யாதவும் அடுத்தடுத்து  இந்தியாவை பலப்படுத்தியதோடு இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்தனர்....

Share via

More Stories