Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள் !

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள் !

 

உடலில் உள்ள மச்சம் அளவில் பெரியதாகவோ, நிற மாற்றம் அடைந்தாலோ, மச்சத்தின் அளவு பட்டாணியை விட பெரியதாக இருந்தாலோ அது தோல் புற்று நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே நீங்கள் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

சிறுநீரில் வெளியாகும் இரத்தம் ஆகும். இது ஆரம்ப காலகட்டத்திலேயே தெரிய வருகிறது என்றும், இதனால் வலி மற்றும் பிற எந்த அறிகுறிகளும் தென்படாது என்றும் கூறப்படுகிறது. இது பரவலாகக் ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய் என்பதால், இந்த அறிகுறிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீரில் இருந்து வெளியேறும் ரத்தம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கலாம்.

விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதனை டிஸ்பேஜியா என்று அழைக்கின்றனர். உங்களுக்கு இந்நோய் பாதிப்பு இருந்தால் உணவுகளை விழுங்குவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் தொண்டை பகுதியில் ஒரு இறுக்கம் ஏற்படலாம். இதனால் அங்கு உணவுகள் சிக்கிக்கொண்டு விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

இடுப்பு, கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் நிணநீர் கணுக்களின் அதிக செறிவு உள்ளது. நீங்கள் நோய்வாய்படும் போது இந்த சிறிய முனைகள் பெரிதாகி விடுகிறது. இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு நிணநீர் மண்டலங்களில் வீக்கம் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். நிணநீர் மண்டலத்தின் வீக்கம் இதன் முக்கிய அறிகுறியாகும்.

ஆண்களில் வயது மற்றும் புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம். புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர் செல்லும் குழாயின் கீழ் உள்ளது. சிறுநீர்ப்பை மீது அழுத்தம் அதிகரிக்கும் போது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பரம்பரையாக ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால் ஆண்களுக்கு இந்நோய் ஏற்படலாம்.

உங்கள் உதடுகள் அல்லது வாயில் புண்கள், வாயின் உள் பகுதியில் வெள்ளை அல்லது சிவப்பு புள்ளிகள் போன்றவை இருந்தால் அது புற்று நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை கண்டவுடன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அதற்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் எடையை இழக்க எந்தவித முயற்சியும் செய்யாமல் உங்களுக்கு எடை இழப்பு ஏற்படுகிறது என்றால், அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே திடீரென எடை இழப்பு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும்.

புற்றுநோயால் ஏற்படும் சோர்வு என்பது சாதாரணமாக நமக்கு ஏற்படும் சோர்வு போன்றதல்ல. நல்லதொரு இரவுத் தூக்கத்திற்கு பிறகும் உங்களுக்கு சோர்வு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். சில வயிற்று புற்றுநோய் காரணமாக ரத்த இழப்பு ஏற்பட்டு சோர்வு ஏற்படலாம். இது நமது உடலில் புற்று நோய் இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

Share via