Advertiment

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

by Admin

சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

 சமீபத்தில் வெளியான பா்ஹானா திரைப்படத்தில் முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.  ஏழ்மையான ஒருமுஸ்லிம் குடும்ப பெண் பொருளாதார ரீதியாக அடையும் இன்னல்களை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது. .நெல்சன் வெங்கடேசன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். செல்வராகவன், கிட்டி ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்று சில இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் படம் வெளியாகி, பெரும் ஆதரவை பெற்று வருகிறதோடு, திரை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்,தி  கேரளா ஸ்டோரி என்னும் படமும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரானதாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த படமும் இஸ்லாமிய மக்களுக்கு இடையில் அவ நம்பிக்கையை விதைத்திருப்பதாக கருதப்படுகிறது. அதனால், இப்படத்தில் நடித்த கதாநாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ்னுடைய சென்னை,தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Share via