
The American journal of cardiology நடத்திய ஆய்வின்படி வாரத்திற்கு இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு 50% வரை இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக 50 வயதை கடந்தாலும் தொடர்ந்து உடலுறவை வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரை அவர்கள் செக்ஸ் வாழ்வில் திருப்தியுடன் இருக்கும்பட்சத்தில், பக்கவாதத்தை தூண்டும் Peripheral artery disease என்ற நோயில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.