Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

புகைபிடிப்பதை நிறுத்துவதால் நன்மைகள் என்ன ?

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
புகைபிடிப்பதை நிறுத்துவதால் நன்மைகள் என்ன ?

 

 கொரோனா தன் கோரா தாண்டவத்தால் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்,   “புகைபிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பதற்கு 50 சதவிகித வாய்ப்புகள்  உள்ளது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஆதனோம் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவதே சிறந்தது எனக் கூறும் அவர், இதன்மூலம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய்களை தவிர்க்க முடியும் என்று கூறுகிறார்.
புகைபிடிப்பதை நிறுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 


* புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது.
 * 12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து சீராகிறது.
*  2- 12 வாரங்களில் உடல் இயக்கம் சீராகிறது, நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.
 * 1 – 9 மாதங்களில்  இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் குறைகிறது.
*  1 வருடத்தில் இதய நோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது. 
*   5 வருடங்களில் பக்கவாதம் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன. 
* 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறைகிறது. வாய், தொண்டை, சிறுநீர்பை புற்றுநோய், கணைய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகிறது. 
* 15 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான ஆபத்து முற்றிலும் குறைகிறது. 
புகைபிடிப்பது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் நன்மைகள்
* 30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 
* 40  வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம். 
*  50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம். 
* 60  வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 


* மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது. 
புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. 
இன்றே புகைப்பதை நிறுத்திப்பாருங்கள், உங்கள் உடலிலும் இத்தகைய மாற்றங்களை கண்டு நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.

Share via