இந்தியா-தென்னாப்பிரிக்கா மூன்று ஒருநாள் போட்டியின் மூன்றாம் ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று மதியம்1.30 அளவில் நடந்தது.டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் களத்தில் இறங்கியதென்னாபிரிக்கா 27.1 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 99 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிக்க ,100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய இந்தியா 19.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன் எடுத்து தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.