ஆஸ்கர் 2022 விருது வழங்கும் விழா மேடையில் க்ரிஸ் ராக் கன்னத்தில், நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை க்ரிஸ் ராக் வேண்டாமென மறுத்துள்ளார்.