உழைப்பு என்பது உன்னதமானது .ஒரு மனிதனை சிறப்படைய செய்வதில் அதன் பங்கு அபரிவிதமான து .உழைப்பு மட்டும் தான் மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தியதோடு ..உயர்த்தியுமிருக்கிறது .தன் சிந்தனை,அறிவு, குறிக்கோள்,விடாமுயற்சி இவற்றோடு உழைப்பும் சேரும் பொழுது தான் ஒரு மனிதன் ..மற்ற மனிதனிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு உயர்ந்து நிற்கிறான்.எடுத்த செயலில் ஒய்வின்றி உழைத்து பணம் , புகழ் , செல்வாக்கு என சமூகத்தின் முன் நிமிர்ந்து நிற்கிறான். இப்படியாக மனிதன் பணத்தின் பின்னால் புகழின். பின்னால் . ஒரு வெறித்தனமாக ஒடுகையில் உடலுக்குள்ளிருக்கும் சதை கருவிகள் இயங்காத நிலைக்குத் தள்ளப்படும். அப்பொழுது இதுவரை ஒடிய ஓட்டத்தின் மீது வெறுப்பு உருவாகும் .இது எதன் பொருட்டு எனில் , தூக்கமின்மை தான் .என்கிற உண்மை தெரியாமலே எது எது குறித்தோ மருத்துவ ஆலோசனை தொடரும்.உழைத்து உயர்ந்திருக்கிறீர்கள் கொஞ்சம் நின்று நிதானியுங்கள் . உழைப்பு உழைப்பு என்ற ஒட்டத்தில் நீங்கள் மறந்த செயல் ..தூக்கமின்மை.. ஒய்வின்மை இந்த இரண்டும் . .மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று.. தூக்கமின்மையால் மனது இறுக்கமாகும்.. அதனால் மன அழுத்த ம் உருவாகும்.உடல் நரம்புகள் செயற்று ..மூளையே ஸ்தம்பித்து போகலாம்...உழைப்பின் உன்னதம் தெரிந்தவர்களே. உழைப்புடன் ஒய்வையும் நேசிங்கள் .இப்பொழுது ..நீங்கள் தூங்குவது ..சோம்பேறியாக அன்று . மேலும்.உழைப்பதற்கான உத்வேகம் பெற நல்ல உணவும் நல்ல தூக்கமும் தான் ஒரு மனிதனை நீண்ட காலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் .தூக்கம் ,அடுத்த பயணத்தின் சக்தி.