Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

பேசினாலும் கொரோனோ பரவும்  சுகாதாரத்துறை எச்சரிக்கை 

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
பேசினாலும் கொரோனோ பரவும்  சுகாதாரத்துறை எச்சரிக்கை 



கொரோனா தொற்று போசினாலும் பரவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனோ முதல் அலையில் இருந்தே மத்திய அரசு பல்வேறு எச்சரிக்கைகளை மக்களுக்கு கூறி வருகிறது. மேலும் தொற்றுநோய் எதன் மூலம் பரவுகிறது என்பதை அரசாங்கம் மக்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறது. அந்த வகையில் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலம் தொற்று அதிகமாக பரவும் என்பதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பேசினாலும் தொற்று பரவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், பேச்சின் மூலம் தொற்றுப் பரவும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பேசும் போது வெளிவரும் எச்சிலின் பெரிய துகள்கள் இரண்டு மீட்டர் தூரத்திற்குள் விழுந்து விடும்.

ஆனால் சிறிய துகள்களான 'ஏரோசோல்கள்'(Aerosols) 10 மீட்டர் வரை பரவலாம் என்று கூறியுள்ளது.
இவை விழுந்த இடத்தை மற்றவர்கள் தெரியாமல் தொட்ட கைகளை கண்களிலோ, மூக்குப் பகுதியிலோ வைத்தால், தொற்று மேலும் வேகமாக பரவும். அதுமட்டுமின்றி காற்றோட்டம் குறைவாக உள்ள அறைகளில், ஏரோசோல்களின் வீரியம் அதிக நேரம் இருக்கும் எனவும் சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே மக்கள் பொது வெளியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது அரசாங்கம் வலியுறுத்தியுள்ள முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share via