Advertiment

நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

by Admin

சினிமா
நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  

தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share via