Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சிறுநீரகப் பாதிப்பு.-.. நீரிழிவு நோய், நோய்த்தொற்று

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
சிறுநீரகப் பாதிப்பு.-.. நீரிழிவு நோய், நோய்த்தொற்று

சிறுநீரகப் பாதிப்பு...

அதீத ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நோய்த்தொற்று, Nephrotic Syndrome, தொடர்ந்து உட்கொள்ளும் வலி மாத்திரைகள், சீறுநீரகத்தில் அல்லது சிறுநீரகக் குழாயில் ஏற்படும் கல் அடைப்பு போன்றவற்றின் காரணமாக சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகப் பாதிப்பின் காரணமாக நச்சுப்பொருட்களான யூரியா மற்றும் க்ரியாட்டீனின் வெளியேறாமல் போவதால் அவற்றின் அளவு உடலில் அதிகமாகி அது ரத்தத்தில் கலந்துவிடும். இவ்வாறு கலப்பதனால் ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் சேர்வதால் நீர்க்கோர்வை பிரச்னை ஏற்படும்.

ஆரம்பக்கட்டத்தில் துவங்கி சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்படும் வரை இந்த அறிகுறி காணப்படும். (Nephrotic Syndrome - சரியான புரதச்சத்து உட்கொள்ளாதவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு புரதச்சத்துக் குறைபாடு (Kwashiorkor) ஏற்படும். அதனால் தோலில் ஏற்படும் சொரி, சிரங்கு போன்றவற்றில் இருந்து சீழ் உருவாகி அந்த நோய்த்
தொற்றின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்.)

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அதற்கு தற்காலிக சிகிச்சையாக டயாலிசிஸ் செய்வார்கள். அதாவது டயாலிசிஸ் என்ற கருவி மூலம் அதிக அளவில் இருக்கும் நச்சுக்கலந்த ரத்தத்தை பிரித்தெடுப்பார்கள். ஆனால், இதனையும் நெடுநாட்கள் மேற்கொள்ள முடியாது.

தொடர்ந்து டயாலிசிஸ் செய்து கொள்ளும்போது உடலில் பொட்டாசியம் போன்ற சத்துக்களின் அளவு குறையும். நோய்த் தொற்றும் ஏற்படலாம். டயாலிசிஸ் மேற்கொள்ள முடியாத நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது அத்தனை சுலபமானதல்ல.

சிறுநீரக தானம் அளிப்பவரின் ரத்தம் மற்றும் திசுக்கள் பாதிக்கப்பட்டவருக்கு சரியாக பொருந்த வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின் அதனை பாதிக்கப்பட்டவரின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கொடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஏற்றுக்கொண்டவரின் உடல் பெறப்பட்ட சிறுநீரகத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் நிராகரிக்காமல் இருப்பதற்காக சாப்பாட்டில் உப்பை குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில முக்கியமான விஷயங்களில் கவனமாக இருப்பதுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுதும் சில மாத்திரைகளை (விலை அதிகமாக இருக்கும்) உட்கொள்ள வேண்டி இருக்கும்.

கொடுக்கப்பட்ட சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் இயல்பாக அந்த நச்சுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறி நீர்க்கோர்வை சரியாகும். எனவே நீர்க்கோர்வை என்பதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் நீர்க்கோர்வை ஏற்பட்ட உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும்.
 

Share via