Advertiment

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்  உடல் ஆரோக்கியம் முக்கியம்

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்   உடல் ஆரோக்கியம் முக்கியம்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - இது திரு மூலரின் கூற்று ,இதன் பொருள் உடம்பு அழிந்து போனால், உயிரும் அழிந்து போகும் என்பது தான்..நம்ம கிராமத்தில் சாதாரணமா சொல்லுவாங்க,சுவர் இருந்ததான் சித்திரம் எழுத முடியுமென்று. நாம் எவ்வளவு பெரிய திறமைகளைக்கொண்டவராகயிருந்தாலும் அதனை வெளிபடுத்த வேண்டுமானால், நம் உடல் ஒத்துழைக்க வேண்டும்.உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு முக்கியம். 1) அரிசி,சர்க்கரை,உப்பு,எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 2) சிறு தானியங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.கம்பு,கேழ்வரகு, சோளம்,சிறு பயறு,வேர்க்கடலை,கருப்பு உளுந்து தினமும் பயன் படுத்த வேண்டும். 3) நார்ச்சத்துள்ள கோதுமை உணவுகளை உட்கொள்வது நல்லது.(சப்பாத்தி,பிரட்) 4) எந்தவிதமான சத்துமில்லாத மைதா வழியிலான ப ரோட்டா,கேக்குகளை தவிர்க்க வேண்டும். சுவைக்காக சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் 5 )தினம் ஒரு முட்டையாவது சாப்பிடவேண்டும். பழத்தில் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடவேண்டும். 6) நூறு கிராம் அளவில் மட்டன்அல்லது சிக்கன்...சைவத்தில் கொண்டை கடலை சுண்டல்,பருப்பு வகை எண்ணெய் தவிரத்த பண்டங்கள். 7) எண்ணெயில் பொரித்த அப்பளம்,வத்தல்கள் கூடுமானவரை தவிர்க்கவேணடும். [தொடரும்]

Share via