
கடந்த 19.12.2021 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முதலிடம் பிடித்து மாநில அளவிலான ஆணழகன் போட்டிக்கு தேர்வு செய்யபட்டார்.
பின்னர் மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வ..உ.சி அரங்கத்தில் கடந்த 02ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 7 நபர்களையும் பின்னுக்குத்தள்ளி குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர்க்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின் குமார் அபிநபு நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் முதலிடம் பிடித்த காவல் ஆய்வாளர்க்கு காவல்துறை துணை தலைவர் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்ததோடு,மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.