
சென்னையில்,கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சித்த மருத்துவ வழியில் சிகிச்சை அளித்து குணப்படுத்த சித்த மருத்துவ மையம் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தொடங்கபெற்றுள்ளது.இவ்மையத்தை திராவிட இயக்கத்தலைவரும விடுதலை இதழின் ஆசிரியருமான கி.வீரமணி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.