
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டது.பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறையின் சார்பாக புதுயுகம் என்கிற பெயரில் இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆறாவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சீலா நாப்கின்களை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் செல்வமீனாள் , முத்துலட்சுமி ஆகியோரிடம் வழங்கினார்.கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா புதுயுகம் நாப்கின்கள் நல்ல உதவியாக இருக்கும் என்று செவிலியர் தெரிவித்தார்.